சினிமா செய்திகள்

சிரஞ்சீவியின் ‘விஸ்வம்பரா’ பட கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது!

சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு விஸ்வம்பரா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

தினத்தந்தி

ஐதராபாத்,

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவர் இதுவரை 156 படங்களில் நடித்து இருக்கிறார். இவர் தற்போது விஸ்வம்பரா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தினை மல்லிடி வசிஷ்டா இயக்கியுள்ளார். 18 வருட இடைவெளிக்கு பிறகு திரிஷா சிரஞ்சீவியுடன் இணைந்து இப்படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். இதற்கு முன்பு கடந்த 2006-ல் ஸ்டாலின் என்ற படத்தில் சிரஞ்சீவி- திரிஷா ஜோடி சேர்ந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மீனாட்சி சவுத்ரி மற்றொரு நாயகியாகவும் நடித்துள்ளார். மேலும், சுரபி, இஷா சாவ்லா, ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தில் அதிகமான வி.எப்.எக்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் சிறப்பு பாடலில் சிரஞ்சீவியுடன் இணைந்து பாலிவுட் நடிகை மவுனி ராய் நடனமாடியுள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு கோடையின் போது வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியானது. டீசரில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்துமே வெவ்வேறு ஹாலிவுட் படங்களின் காட்சிகளின் தழுவலில் உருவாக்கி உள்ளதாக டீசர் விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்தநிலையில், நடிகர் சிரஞ்சீவி இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில், விஸ்வம்பரா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்