மும்பை
பிரபல பாலிவுட் நடன இயக்குனர் ரெமோ டிசோசாவுக்கு இன்று பிற்பகல் மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவர் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரெமோவின் மனைவி லிசெல் டிசோசா இதனை உறுதிசெய்து உள்ளார். அடுத்த 24 மணிநேரம் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளதாக டாக்டர்கள் கூறி உள்ளனர்.
அவருக்கு இருதய அடைப்பு உள்ளது மருத்துவர்கள் ஆஞ்சியோகிராபி செய்துள்ளனர். அவர் ஐ.சி.யுவில் உள்ளார். தயவுசெய்து பிரார்த்தனை செய்யுங்கள். அடுத்த 24 மணிநேரம் மிகவும் முக்கியமானது என அவரது மனைவி லிசெல் டிசோசா கூறி உள்ளார்.
ரெமோவின் உடல் நிலை தற்போது சீராக உள்ளது. இருந்தாலும் அவர் 24 மணி நேர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளதாக அவரது செய்தி தொடர்பாளர் கூறினார்.
சல்மான் கான் நடித்த 'ரேஸ் 3' உள்பட பல படங்களில் நடன இயக்குனராக பணி புரிந்து உள்ளார். பல டிவி நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.