சினிமா செய்திகள்

கீர்த்தி சுரேஷ், விஜய் தேவரகொண்டா இணைந்து நடிக்கும் படத்தின் பூஜை கிளிக்ஸ்..!

திருமணத்திற்குப் பிறகு தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

தினத்தந்தி

ஐதராபாத்,

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக மக்களால் கொண்டாடப்படுபவர் கீர்த்தி சுரேஷ். கடந்த வருடம் தனது நீண்ட நாள் நண்பர் ஆண்டனி தட்டில் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அதன்பின் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார்.

இந்த நிலையில், திருமணத்திற்குப் பிறகு தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ரவி கிரண் கோலா இயக்கும் இப்படத்தில் விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்கிறார். 'வாரிசு' படத்தைத் தயாரித்த தில் ராஜு இப்படத்தைத் தயாரிக்கிறார். விஜய் தேவரகொண்டாவும் கீர்த்தி சுரேஷும் முன்பு "மகாநதி" படத்தில் நடித்திருந்தாலும், ஜோடியாக நடிப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த நிலையில், இப்படத்தின் பூஜை இன்று காலை ஐதராபாத்தில் நடைபெற்றுள்ளது. பூஜையின் போது எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை