சினிமா செய்திகள்

வாரிசு, துணிவு சிறப்புக் காட்சிகளைத் திரையிட்ட 8 திரையரங்குகளுக்கு கோவை கலெக்டர் நோட்டீஸ்

ஒரே நாளில் 2 உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியானதால் இருவரது ரசிகர்களும் உற்சாகம் அடைந்தனர்

தினத்தந்தி

கோவை,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் நடித்த 'துணிவு', நடிகர் விஜய் நடித்த 'வாரிசு' ஆகிய திரைப்படங்கள் வெளியானது.

ஒரே நாளில் 2 உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியானதால் இருவரது ரசிகர்களும் உற்சாகம் அடைந்தனர். படம் வெளியான தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் கட்-அவுட், பேனர் வைத்தும், கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி வாரிசு, துணிவு பட  சிறப்புக் காட்சிகளை வெளியிட்ட 8 திரையரங்குகளுக்கு கோவை கலெக்டர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது