சினிமா செய்திகள்

அ.தி.மு.க.வில் இணைந்தார் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு

திரைப்பட நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு அ.தி.மு.க.வில் இணைந்தார்.

சென்னை,

தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருபவர் நடிகர் கஞ்சா கருப்பு. இவர் இயக்குநர் பாலா இயக்கிய பிதாமகன் படத்தில் கஞ்சா விற்பனை செய்பவராக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து கருப்பு ராஜா என்ற பெயரை கொண்ட இவர் கஞ்சா கருப்பு என அழைக்கப்படுகிறார்.

இதன்பின் ராம், சிவகாசி, அறை எண் 305ல் கடவுள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு அ.தி.மு.க.வில் தன்னை இன்று இணைத்து கொண்டார்.

இதுதொடர்பாக அ.தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமியை அவரது வீட்டில் நடிகர் கஞ்சா கருப்பு இன்று சந்தித்தார். அப்போது அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்து கொண்டார் என தெரிவித்துள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்