சினிமா செய்திகள்

கமல்ஹாசனுடன் நடித்த கிரிஷ் கர்னாட்டை கொல்ல சதி

பெங்களூரு ராஜ ராஜேஷ்வரி நகரில் வசித்த மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கடந்த வருடம் செப்டம்பர் 5–ந் தேதி துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார்.

தினத்தந்தி

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவத்தை அரசியல் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் கண்டித்தனர்.

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு கவுரி லங்கேசுடன் நெருங்கிய நட்பு இருந்ததால் அவரும் குற்றவாளிகளை பிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வற்புறுத்தி வந்தார். கர்நாடக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினார்கள்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக பரசுராம் வாக்மோரே, அமோல்காலே, நவின்குமார், அமித்தேக்வேகர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். அமோல்காலேவிடம் இருந்து டைரி ஒன்றை பறிமுதல் செய்தனர். அதில் மேலும் கொலை செய்யவேண்டியவர்கள் என்ற பட்டியல் இருந்தது.

அதில் நடிகர் கிரிஷ் கர்னாட் பெயர் இடம்பெற்று இருந்தது. இவர் கமல்ஹாசனுடன் ஹேராம் படத்தில் நடித்தவர். காதலன், ரட்சகன், மின்சார கனவு உள்பட பல படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்தியிலும் அதிக படங்களில் நடித்தார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை