சென்னை,
ரவி தேஜாவின் சமீபத்திய படங்கள் சரியாக ஓடவில்லை. சமீபத்தில் வெளியான மாஸ் ஜதாரா படமும் ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தது. இந்தப் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தநிலையில், ரவி தேஜாவின் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்தனர்.
இதனால் ரவி தேஜா தனது ரசிகர்களுக்கு ஒரு புதிய ஆச்சரியத்தை அளித்துள்ளார். சமீபத்தில், அவர் தனது புதிய படத்தை அறிவித்தார், கிஷோர் திருமலா இயக்கும் இப்படத்திற்கு பாரத மகாசாயுலகு விக்ஞாப்தி எனப்பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தப் படத்திற்காக அவர் சம்பளம் வாங்காமல் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர்களுக்கு சுமையாக இருக்கக்கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. படத்தின் வெற்றிக்குப் பிறகு அவர் லாபத்தில் பங்கு எடுத்துக்கொள்வார் என்ற மற்றொரு பேச்சும் உள்ளது.
இது ரசிகர்களை அதிர்சியடைய செய்துள்ளது. இருப்பினும், இதன் உண்மை தன்மை என்ன என்பது இன்னும் தெரியவில்லை. இதுவரை இது பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.