சினிமா செய்திகள்

இஸ்ரேல் போர் குறித்து சர்ச்சை பேச்சு: பிரபல நடிகைக்கு குவியும் கண்டனம்

ஹமாஸ் படையினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆபாச பட நடிகை மியா கலிபா தனது சமூக வலைத்தள பக்கத்தில் சில கருத்துகளை தெரிவித்து உள்ளார்

இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தொடுத்த போர் உலக நாடுகளையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

ஹமாஸ் அமைப்பினருக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் ஹமாஸ் படையினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆபாச பட நடிகை மியா கலிபா தனது சமூக வலைத்தள பக்கத்தில் சில கருத்துகளை தெரிவித்து உள்ளார்

அதில், "பாலஸ்தீனியர்கள் இத்தனை காலம் அடைந்த துன்பத்தைப் பார்த்தும், நாம் அவர்களுக்கு இல்லை என்றால் அதுதான் தவறு. பாலஸ்தீனத்தில் உள்ள சுதந்திர போராட்ட வீரர்களிடம், அவர்கள் படும் துயரத்தை ரெக்கார்ட் செய்யச் சொல்ல முடியுமா?" என்று மியா கலிபா குறிப்பிட்டிருந்தார்.

பாலஸ்தீன பயங்கரவாதிகளை சுதந்திர போராட்ட வீரர்கள் என மியா கலிபா குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

மியா கலிபாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், அவருடன் போட்டுள்ள தொழில் ரீதியான ஒப்பந்தங்களை கனடா நாட்டின் பிரபல வானொலி நிலையம் ரத்து செய்துள்ளது.

அதேபோல அமெரிக்காவின் பிரபல பிளேபாய் நிறுவனமும் அவருடனான அனைத்து ஒப்பந்தங்களையும் நிறுத்திக்கொள்வதாக அறிவித்திருக்கிறது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு