சென்னை,
ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கூலி திரைப்படம் கடந்த 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் படைத்து சாதனைப் படைத்துள்ளது. இப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் தங்களது குழந்தைகளுடன் படம் பார்க்க தியேட்டர்களுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கூலி படத்தை விட அதிக வன்முறை காட்சிகள் இடம்பெற்றிருந்த கேஜிஎப், பீஸ்ட் படங்களுக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கூலி திரைப்படத்தை யு/ஏ சான்றிதழுடன் தியேட்டர்களில் திரையிட அனுமதிக்க வேண்டும் என சன் பிக்சர்ஸ் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
இதற்கிடையில், சிங்கப்பூரில் கூலி படத்தை மறுதணிக்கை செய்யப்பட்டு அதிலிருந்து 4 நிமிட காட்சியை படக்குழுவின் ஒப்புதலுடன் நீக்கியுள்ளனர். அதன்படி, பெற்றேர் அனுமதியுடன் அனைவரும் படம் பார்க்கும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, No children under 16 (NC-16) என்பதிலிருந்து PG-13 (Parents strongly cautioned) என மாற்றப்பட்டுள்ளது. இது போல் உலகம் முழுவதும் அனுமதி வழங்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.