சினிமா செய்திகள்

கொரோனா பாதிப்பு: எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை

கொரோனா பாதிப்பு காரணாமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை,

கொரோனா பாதிப்பால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு செயற்கை சுவாச கருவிகள் உதவியுடன் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்திய மொழிகள் அனைத்திலும் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை நிகழ்த்திய பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கடந்த 5-ந் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். லேசான கொரோனா தொற்று உள்ளது என்றும், இரு தினங்களில் குணமடைந்து வீடு திரும்பி விடுவேன் என்றும் அவரே வீடியோவில் நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.

ஆனால் கடந்த 13-ந் தேதி உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டு மருத்துவ குழுவின் ஆலோசனையின்படி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். செயற்கை சுவாசக்கருவிகள் பொருத்தப்பட்டன. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும், மருத்துவ குழுவின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார் என்றும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீரான நிலையில் உள்ளது என்றும், அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவ குழு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறது என்றும் மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டது. நேற்று மருத்துவ அறிக்கை வெளியிடப்படவில்லை. அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருவதாக ஆஸ்பத்திரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பொதுமருத்துவம், இருதய நோய், நுரையீரல், தொற்றுநோய் போன்றவற்றில் நிபுணத்துவம் உள்ள மருத்துவ குழு அமைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அமெரிக்க டாக்டர்கள், மும்பை, டெல்லியை சேர்ந்த மருத்துவர்கள் குழுவினருடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை பெற்றும் சிகிச்சை அளிக்கின்றனர்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஏற்கனவே உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தைராய்டு பிரச்சினையும் உள்ளது. வேறு பெரிய அளவில் ஆரோக்கிய பாதிப்பு இல்லை. எனவே சிகிச்சைக்கு அவரது உடல் நிலை ஒத்துழைப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் லேசான கொரோனா அறிகுறியுடன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மனைவி சாவித்திரியும் அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உள்ளார். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைய ரசிகர்களும், திரையுலகி னரும் வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிடுகிறார்கள்.

நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில். அன்பிற்கினிய அன்னைய்யா, உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். எனது குரலாக நீங்களும். உமது முகமாக நானும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம். உங்கள் குரல் இன்னும் ஒலித்திட வேண்டும். மீண்டும் வாருங்கள். தொரகா ரண்டி அன்னைய்யா என்று பதிவிட்டுள்ளார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்