சினிமா செய்திகள்

கொரோனா பரவல்: திருமணத்தை தள்ளி வைத்த நடிகை

கொரோனா பரவல்: திருமணத்தை தள்ளி வைத்த நடிகை.

தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால் படம் முலம் அறிமுகமானவர் மெஹ்ரின். தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் நோட்டா, தனுசின் பட்டாஸ் படங்களில் நடித்தார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

மெஹ்ரினுக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. அரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் பஜன்லாலின் பேரன் பவ்யா பிஷ்னோயை மணக்கிறார். ஓரிரு மாதங்களில் திருமணத்தை நடத்த ஏற்பாடுகள் நடந்து வந்தன.

இந்த நிலையில் மெஹ்ரினுக்கும் அவரது அம்மாவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இருவரும் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா காரணமாக திருமணத்தை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து மெஹ்ரின் கூறும்போது, கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. இந்த சூழ்நிலையில் திருமணத்தை நடத்துவது பாதுகாப்பானது இல்லை. எனவே திருமணத்தை அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்க யோசித்து வருகிறோம்'' என்றார். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலக மெஹ்ரின் முடிவு செய்துள்ளார். புதிய படங்கள் எதிலும் அவர் ஒப்பந்தமாகவில்லை.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்