சினிமா செய்திகள்

கிரிக்கெட் வீரர் கங்குலி வாழ்க்கை சினிமா படமாகிறது

கிரிக்கெட் வீரர்கள் டோனி, சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கை ஏற்கனவே திரைப்படமாக வெளிவந்து வரவேற்பை பெற்றன.

தினத்தந்தி

கிரிக்கெட் வீரர்கள் டோனி, சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கை ஏற்கனவே திரைப்படமாக வெளிவந்து வரவேற்பை பெற்றன. தற்போது கபில்தேவ் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்ற உண்மை சம்பவத்தை 83 என்ற பெயரில் படமாக்கி உள்ளனர்.

இதில் கபில்தேவ் வேடத்தில் ரன்வீர் சிங்கும், அவரது மனைவி ரோமியா பாடியா வேடத்தில் தீபிகா படுகோனேவும் நடித்து உள்ளனர். தமிழக வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா நடித்து உள்ளார்.

இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் வெளியாக உள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் வாழ்க்கையும் சபாஷ் மித்து என்ற பெயரில் படமாகி வருகிறது. இதில் டாப்சி நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் கங்குலியின் வாழ்க்கையும் படமாக உள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. ஏற்கனவே கங்குலி தனது வாழ்க்கை சினிமா படமாக தயாரானால் அதில் தன்னுடைய வேடத்தில் ரன்பீர் கபூர் நடிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து இருந்தார். எனவே இந்த படத்தில் ரன்பீர் கபூர் நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு