சினிமா செய்திகள்

அப்பா, அம்மா பிரிந்ததில் வருத்தம் - கமல் மகள் அக்‌ஷரா ஹாசன்

கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன், ஷமிதாப் இந்தி படத்தில் அறிமுகமாகி விவேகம், கடாரம் கொண்டான் படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாகி இருக்கிறார்.

தினத்தந்தி

சினிமாவுக்கு வந்து 4 வருடங்களில் நான்கு படங்களில் மட்டுமே நடித்து இருக்கிறீர்களே? என்று கேட்கிறார்கள். நிறைய கதைகள் வருகின்றன. ஆனால் எனக்கு பிடித்த மாதிரி இல்லை. நடன கலைஞராக வேண்டும் என்ற எனது லட்சியம் நிறைவேறவில்லை. 4 ஆண்டுகள் உதவி இயக்குனராக பணியாற்றினேன். அதன்பிறகு எதிர்பாராமல் நடிகையாகி விட்டேன். முடிந்தவரை நடிகையாகவே நீடிப்பேன். டைரக்டராக வேண்டும் என்றும் விருப்பம் உள்ளது.

ரஜினிகாந்த் மற்றும் எனது அப்பா நடிக்கும் படங்களை இயக்க ஆசை இருக்கிறது. ஆனால் அதற்கான அனுபவம் இல்லை. அப்பாவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதிர்ஷ்டம். எனது தனிப்பட்ட சில படங்கள் லீக் ஆகிவிட்டன. கடந்த காலம் பற்றி பேசுவதில் பிரயோஜனம் இல்லை.

நாம் சரியாக இருந்தாலும் சில நேரம் தவறாக புரிந்து கொள்ளும் வாய்ப்புகள் இந்த துறையில் இருக்கிறது. நம்மை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும். நம்மை பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்ன பேசுகிறார்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பது முக்கியம் இல்லை. நமக்கு இருப்பது ஒரு வாழ்க்கை. அதை சந்தோஷமாக கொண்டு செல்ல வேண்டும்.

மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப்பட்டு வாழ முடியாது. அம்மா, அப்பா பிரிந்ததில் வருத்தம் இருக்கிறது. இந்த உலகமே மூழ்கி போனது போல் இருந்தது. எனக்கு இருவருமே முக்கியமானவர்கள். இவ்வாறு அக்ஷரா ஹாசன் கூறினார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை