சினிமா செய்திகள்

விமானத்தில் நடுவானில் பாலியல் தொல்லை: தங்கல் பட நடிகை ஜைரா வாசிம் குற்றச்சாட்டு

விமானத்தில் நடுவானில் தனக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டுள்ளது என தங்கல் இந்தி படத்தில் நடித்த நடிகை ஜைரா வாசிம் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நடிகர் ஆமீர் கானின் நடிப்பில் வெளியான இந்தி படம் தங்கல். இதில் அவரது மகளாக நடிகை ஜைரா வாசிம் (வயது 17) நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்ததற்காக ஜனாதிபதியிடம் இருந்து சிறந்த சாதனையாளருக்கான தேசிய குழந்தைகள் விருதும் அவர் பெற்றுள்ளார். படத்தில் மல்யுத்த வீராங்கனையாக வரும் அவர் போட்டியில் அதிரடியாக விளையாடி வெற்றி பெறுவார்.

ஆனால் நிஜ வாழ்க்கையில் அந்த அதிர்ஷ்டம் அவருக்கு இருக்கவில்லை. விமான பயணம் ஒன்றில் தனக்கு ஏற்பட்ட கொடுமை பற்றி இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

அதில், ஏர் விஸ்தாரா விமானம் ஒன்றில் ஜைரா பயணம் மேற்கொண்டு உள்ளார். விமானம் நடுவானில் சென்று கொண்டு இருந்துள்ளது. அவரது பின் இருக்கையில் அமர்ந்திருந்த நடுத்தர வயது கொண்ட நபர் ஒருவர் ஜைராவிடம் தகாத முறையில் நடந்துள்ளார்.

இதுபற்றி அழுதுகொண்டே அவர் வீடியோவில் தெரிவித்துள்ளார். இது மிக பயங்கரம் நிறைந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், விமானத்தில் இருந்த ஒருவரும் தனது உதவிக்கு வரவில்லை. இதுவா சிறுமிகளை நீங்கள் கவனித்து கொள்ளும் விதம்? எங்களை போன்ற சிறுமிகளுக்கு உதவ யார் இருக்கின்றனர்? எங்களுக்கு நாங்களே உதவி செய்து கொள்ளவில்லை எனில் ஒருவரும் உதவிக்கு வரமாட்டார்கள் என அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.

வீடியோ காண்க:

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது