சினிமா செய்திகள்

’ரஜினி, தனுஷுக்கு பிறகு உங்களிடம் அதை பார்க்கிறேன்’ - பிரதீப் ரங்கநாதனை பாராட்டிய நாகார்ஜுனா

‘டியூட்’ படம் வரும் 17ம் தேதி வெளியாக உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழை போலவே தெலுங்கிலும் தற்போது பிக் பாஸ் 9ம் சீசன் நடைபெற்று வருகிறது. இதை நாகார்ஜுனா தொகுத்து வழங்குகிறார். இதற்கிடையில், இதில் டியூட் படத்தின் புரமோஷனுக்காக மமிதா பைஜு மற்றும் பிரதீப் ரங்கநாதன் கலந்துகொண்டனர்.

அப்போது பிரதீப் ரங்கநாதனை நாகார்ஜுனா பாராட்டினார். அவர் கூறுகையில், சில பத்தாண்டுகளுக்கு முன்பு, ரஜினி சார் சினிமாவுக்கு வந்து விதியை மாற்றினார். பிறகு, தனுஷ் ஒரு புதிய பாணியைக் கொண்டு வந்தார். இப்போது, பிரதீப் ரங்கநாதனில் அந்தத் தீப்பொறியைப் பார்க்கிறேன்' என்றார்.

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் இருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவரது நடிப்பில் சமீபத்தில் டிராகன் படம் வெளியாகி நல்லவரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி' படத்தில் நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் 18ம் தேதி வெளியாகிறது.

அதனை தொடர்ந்து கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் டியூட் படத்திலும் நடித்துள்ளார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இப்படம் வரும் 17ம் தேதி வெளியாக உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து