சினிமா செய்திகள்

புதிய தோற்றத்தில் தனுஷ்

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து சமீபத்தில் வெளியான அசுரன் படம் பெரிய வெற்றி பெற்றது. பிற மொழிகளிலும் இந்த படம் ரீமேக் ஆகி வருகிறது.

தினத்தந்தி

அடுத்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் பட்டாஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதில் தனுஷ் தந்தை மகனாக இரு வேடங்களில் வருகிறார். தந்தை கதாபாத்திரத்தின் பெயர் பட்டாஸ் என்றும் அதையே படத்துக்கு தலைப்பாக்கி உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துக்கு பிறகு சினேகாவும் இந்த படத்தில் இணைந்துள்ளார். மெஹ்ரீன் கதாநாயகியாக நடித்துள்ளார். நவீன் சந்திராவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.

சோழர் காலத்தில் பயன்படுத்திய தற்காப்பு கலையை படத்தில் பயன்படுத்தி உள்ளனர். அதிரடி காதல் படமாக தயாராகி உள்ளது. இந்த படத்துக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் தனுஷ் தற்போது நடித்து வருகிறார். தாதாக்களை மையப்படுத்தி அதிரடி படமாக தயாராகிறது.

இந்த படத்தில் தனுஷ் நடிக்கும் தோற்றம் வெளியாகி உள்ளது. இதில் நீளமான மீசை வைத்து நடிக்கிறார்.

பேட்ட படத்தில் ரஜினிகாந்த் நீளமான மீசை வைத்து இருந்ததுபோல் தனுஷ் மீசை உள்ளது. இந்த தோற்றத்தை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்