சினிமா செய்திகள்

‘அசுரன்’ படத்துக்காக தனுசுக்கு மீண்டும் விருது

தனுஷ் ஆடுகளம் படத்தில் நடித்ததற்காக ஏற்கனவே சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். சமீபத்தில் அசுரன் படத்தில் நடித்ததற்காக 2-வது தடவையாக மீண்டும் தேசிய விருதை பெற்றார்.

தினத்தந்தி

இந்த நிலையில் அசுரன் படத்துக்காக தற்போது இன்னொரு விருதும் கிடைத்து உள்ளது. கோவாவில் 8 நாட்கள் நடந்த 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது. கோவா பட விழாவில் இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு மொழிகளில் வெளியான சிறந்த திரைப்படங்கள் திரையிடப்பட்டன. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகமும், கோவா மாநில அரசும் இணைந்து இந்த விழாவை நடத்தின.

நடிகை சமந்தா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று உரையாற்றினார். இதில் இந்திய திரைப்பட விழாவுடன் இணைந்து நடத்தப்பட்ட பிரிக்ஸ் திரைப்பட விழாவில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருதுக்கு தனுஷ் தேர்வு செய்யப்பட்டார். அசுரன் படம் 2019-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. விருது பெற்ற தனுசுக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து தெரிவித்தனர். தனுஷ் ரசிகர்களும் வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை