சினிமா செய்திகள்

தனுஷின் நடிப்பும், அர்ப்பணிப்பும் என்னை வியக்க வைத்தது- நடிகை கீர்த்தி சனோன்

தனுஷ், கீர்த்தி சனோன் இணைந்து ‘தேரே இஷ்க் மே' என்ற படத்தில் நடித்துள்ளனர்.

தினத்தந்தி

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சனோன் நடிப்பில் தேரே இஷ்க் மே' என்ற இந்தி படம், வருகிற 28-ந் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். தமிழ், இந்தியில் வெளியாக உள்ள இந்த படத்தில் ஓ காதலே...' என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. மஷூக் ரகுமானின் வரிகளில், ஆதித்யாவின் குரலில் வெளியான இந்த பாடல் ரசிகர்களிடம் வரவேற்பும் பெற்று வருகிறது.

இதற்கிடையில் தனுஷ் குறித்து கீர்த்தி சனோன் கருத்து தெரிவித்துள்ளார். தனுஷ் அற்புதமான கலைஞர். திறமைமிக்க அவரது நடிப்பும், அர்ப்பணிப்பும் என்னை வியக்க வைத்தது. அவரை போன்ற கலைஞர்களுடன் பணிபுரிவது பெருமையும், நல்ல விஷயமும் கூட'' என்றார். தனுஷ் ஏற்கனவே இந்தியில் ராஞ்சனா', ஷமிதாப்', அத்ராங்கி ரே' போன்ற படங்கள் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை