சினிமா செய்திகள்

தனுஷ் நடிக்கும் “கர” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ், மமிதா பைஜு நடிக்கும் ‘கர’ படம் ஏப்ரல் 30ம் தேதி வெளியாகிறது.

சென்னை,

நடிகர் தனுஷ் நடிக்கும் 54-வது படத்தை 'போர் தொழில்' படத்தின் மூலம் அறிமுகமான விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார். இந்த படத்தில் மமிதா பைஜு, கே.எஸ். ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சரமூடு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படத்துக்கு ‘கர’ என்று பெயரிடப்பட்டுள்ளது. டைட்டில் வீடியோவில் தனுஷ் பேசும், வசனங்கள் ரசிகர்களை கவர்ந்தன.

சமீபத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், வெளியீட்டிற்கான பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ், ‘கர’ திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தனுஷ் நடிக்கும் “கர” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.