சினிமா செய்திகள்

தனுஷின் “தேரே இஷ்க் மெய்ன்”.. 13 நாட்களில் இத்தனை கோடி வசூலா?

தனுஷ், கிரித்தி சனோன் நடித்த ‘தேரே இஷ்க் மெய்ன்’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

தினத்தந்தி

தனுஷ் - இயக்குநர் ஆனந்த் எல். ராய் கூட்டணியில் உருவானதேரே இஷ்க் மெய்ன் பாலிவுட் படம் கடந்த 28ம் தேதி வெளியானது. ஆனந்த் எல் ராய், தனுஷின் முந்தைய பாலிவுட் படங்களான 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' ஆகிய படங்களை இயக்கியவர். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கிரித்தி சனோன் நடித்துள்ளார்.

தனுஷின் நடிப்பிற்கு ரசிகர்களிடமும் நல்ல பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது. படத்தின் கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில் பாக்ஸ் ஆபிஸ் விவரம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தேரே இஷக் மெய்ன் படம் 13 நாட்களில் ரூ.152 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தொடர்ந்து இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை