சினிமா செய்திகள்

டோனி - விக்ரம் திடீர் சந்திப்பு..! வைரலாகும் புகைப்படம்..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனியை நடிகர் விக்ரம் சந்தித்துள்ளார்.

சென்னை,

ஐ.பி.எல் மெகா ஏலம் வருகிற 12 மற்றும் 13-ந்தேதிகளில் பெங்களூருவில் நடைபெறுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏலத்தில் வீரர்களை எடுப்பது தொடர்பாக ஆலோசிக்க சென்னை அணியின் கேப்டன் டோனி சென்னை வந்துள்ளார்.

இந்த நிலையில் டோனியை நடிகர் விக்ரம் நேரில் சென்று சந்தித்துள்ளார். இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் விக்ரம் தற்போது அவரது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து 'மகான்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மகான் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது. 'மகான்' திரைப்படம் வருகிற பிப்ரவரி 10-ந்தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.