சினிமா செய்திகள்

‘துரந்தர் 2’-க்காக காத்திருக்கிறேன்’ - ரன்பீர் கபூர் உற்சாகம்

துரந்தர் 2 படம் வருகிற மார்ச் 19-ம் தேதி வெளியாக உள்ளது.

மும்பை,

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் , சமீபத்திய நேர்காணலில் துரந்தர் திரைப்படத்தை பாராட்டியுள்ளார். சமீப காலத்தில் வெளியான படங்களில் இதுதான் தனது மிகவும் பிடித்த படம் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த படத்தை ஏற்கனவே இருமுறை பார்த்ததாகவும் கூறினார்.

படத்தில் நடித்த ஒவ்வொருவரும் தனது 100 சதவீத உழைப்பை கொடுத்துள்ளனர் என்றும் ‘பார்ட் 2’-ஐ ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

துரந்தர் 2 படம் வருகிற மார்ச் 19-ம் தேதி வெளியாக உள்ளது. ஆதித்யா தார் இயக்கி உள்ள இப்படத்தில் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், மாதவன், அக்சய் கண்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.