சினிமா செய்திகள்

’ஜெயிலர் 2’ - கேமியோ ரோலை நிராகரித்தாரா பாலையா?

’ஜெயிலர் 2’ படத்தில் பாலையா கேமியோ ரோலில் நடிப்பதாக வதந்திகள் பரவி வந்தன.

தினத்தந்தி

சென்னை,

நந்தமுரி பாலகிருஷ்ணா(பாலையா) தற்போது அகண்டா 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். போயபதி ஸ்ரீனு இயக்கியுள்ள இந்த பிரமாண்டமான படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.

இதற்கிடையில், ரஜினிகாந்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜெயிலர் 2 படத்தில் பாலையா கேமியோ ரோலில் நடிப்பதாக வதந்திகள் பரவி வந்தன.

இந்நிலையில், பாலையா இந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஜெயிலர் 2 படத்தில் அவர் நடிப்பதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாதநிலையில், இந்த தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பரவத் தொடங்கியுள்ளது.

ஜெயிலர் 2 தயாரிப்பாளர்கள் இப்போது பகத் பாசிலை கேமியோ ரோலில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிகிறது. இது பாலையாவுக்காக உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்