சினிமா செய்திகள்

பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் மருத்துவமனையில் அனுமதி

பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மும்பை,

பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமாருக்கு தற்போது 98 வயது. முதுமை காரணமாக இவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், திலிப் குமாருக்கு நேற்று சுவாச பிரச்சினை ஏற்பட்டதையடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக இதே மருத்துவமனையில் நடிகர் திலிப் குமார் அனுமதிக்கப்பட்டார். அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டதையடுத்து, உடனடியாக மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கடந்த ஆண்டு திலிப் குமாரின் இரு சகோதரர்கள் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்ததனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்