சினிமா செய்திகள்

தினகரன் சிறந்த அரசியல்வாதி இல்லை; ஆர்.கே.நகர் வெற்றிக்கு பணமே காரணம் - குஷ்பு

தினகரன் சிறந்த அரசியல்வாதி இல்லை, ஆர்.கே.நகர் வெற்றிக்கு பணமே காரணம் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறி உள்ளார்.

புதுடெல்லி

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஓபிஎஸ், ஈபிஎஸ் ஜெயலலிதாவுக்கு செய்த துரோகத்தால் ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் வெற்றி பெற்று உள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுக்கு, ஆட்சியின் மீதான அதிருப்தியே காரணம். ஜெயலலிதாவை விட டிடிவி தினகரன் சிறந்த அரசியல்வாதி கிடையாது. டிடிவி தினகரனின் குறிக்கோள் தமிழகத்தில் ஆட்சியை கலைப்பது தான்.

ஆர்.கே.நகர் தொகுதியில் டிடிவி தினகரனுக்கு இவ்வளவு வாக்குகள் எப்படி கிடைத்தன. பணப்பட்டுவாடா தொடர்பான புகார்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழக மக்கள் தினகரன் முதலமைச்சராக வேண்டும் என நினைக்கவில்லை. தினகரன் சிறந்த அரசியல்வாதி இல்லை. ஆர்.கே.நகர் வெற்றிக்கு பணமே காரணம் என கூறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...