சினிமா செய்திகள்

பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் ஜோடி, ஸ்ரீதிவ்யா

தமிழ் பட உலகின் இளம் கதாநாயகர்களில் ஒருவரான கவுதம் கார்த்திக் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

தினத்தந்தி

இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இதில் கவுதம் கார்த்திக் ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். பத்ரி வெங்கடேஷ் டைரக்டு செய்கிறார். எல்.சிந்தன், ராஜேஷ்குமார் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.

இவர்கள் தயாரிப்பில் பத்ரி வெங்கடேஷ் ஏற்கனவே பிளான் பண்ணி பண்ணணும் என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார். படத்தின் இறுதி வடிவத்தை பார்த்து வியந்து அவரை தங்களின் புதிய படத்துக்கும் டைரக்டராக ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள். புதிய படத்தை பற்றி டைரக்டர் பத்ரி வெங்கடேஷ் கூறியதாவது:-

இந்த படத்தில் கவுதம் கார்த்திக், வடசென்னையைச் சேர்ந்த வெரலு என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா, பிசியோதெரபிஸ்ட் வேடத்தில் வருகிறார். ஒரு படம் தயாரிப்பில் இருக்கும்போதே அந்த படத்தின் டைரக்டருக்கு அதே தயாரிப்பாளர்கள் இன்னொரு புதிய படத்தையும் இயக்கும் வாய்ப்பை தருவது அபூர்வம். எனக்கு அப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி.

கதாநாயகன் கவுதம் கார்த்திக் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். அதில் இருந்து அவர் எப்படி வெளியே வருகிறார்? என்பதுதான் கதை. அட்டகாசமான திரைக்கதை. படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருக்கிறது. சென்னை, ராஜஸ்தான், குஜராத், கேரளா ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி