சினிமா செய்திகள்

இயக்குனர் சேரனின் தந்தை காலமானார்...!

இயக்குனர் சேரனின் தந்தை பாண்டியன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்...!

தினத்தந்தி

மதுரை,

பாரதி கண்ணம்மா, பொற்காலம், தேசிய கீதம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, மாயக்கண்ணாடி, பொக்கிஷம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர்இயக்குனர் சேரன். இவர் சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், ராமன் தேடிய சீதை, மாயக்கண்ணாடி போன்ற சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து இருந்தார்.

கடைசியாக ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை என்ற படத்தை இயக்கினார். சிறிய இடைவெளிக்கு பிறகு திருமணம், ஆனந்தம் விளையாடும் வீடு, குடிமகன் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது பிரபல நடிகர் கிச்சா சுதீப்பை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் சேரனின் தந்தை எஸ்.பாண்டியன் (வயது 84) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். சினிமா ஆப்பரேட்டராக பணிபுரிந்து வந்த அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை 6:30 மணிக்கு மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பழையூர்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். 

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை