சினிமா செய்திகள்

கென் கருணாஸ் இயக்கும் புதிய படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியீடு

நடிகர் கருணாஸ் மகனான கென் கருணாஸ் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

தினத்தந்தி

2019ம் ஆண்டு வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படத்தில் தனுஷின் இளைய மகனாக கென் கருணாஸ் நடித்து இருந்தார் . இவரது நடிப்பு பலராலும் பாராட்டு பெற்றது. அதைத் தொடர்ந்து வாத்தி மற்றும் விடுதலை 2 படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றார். மேதகு என்ற படத்தை இயக்கி சலசலப்பை உருவாக்கிய இயக்குனர் கிட்டு அடுத்ததாக இயக்கியிருக்கும் படம் 'சல்லியர்கள்'. இப்படத்தின் மூலம் கென் கருணாஸ் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இதில் ஈஸ்வர் என்றவருடன் இணைந்து இசையமைத்திருந்தார். இதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் இயக்குநராக கென் கருணாஸ் அறிமுகமாகிறார். பர்வாதா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்திற்கு தலைப்பு வைக்கப்படவில்லை. ஆனால் தற்காலிகமாக புரொடக்ஷன் நம்பர் 1 என அழைக்கப்படுகிறது. இந்த நிறுவனத்துடன் ஸ்ட்ரீட் பாய்ஸ் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. பள்ளி பருவ வாழ்க்கையை மைய்யமாக வைத்து இப்படம் உருவாகிறது.

இப்படத்தை இயக்குவதோடு நடிக்கவும் செய்கிறார் கென் கருணாஸ். இப்படத்தின் அறிவிப்பு ஒரு முன்னோட்டமாக வெளியாகியுள்ளது. மேலும் அடுத்த முன்னோட்டம் வரும் 18ம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பாக்கப்படுகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து