சென்னை,
மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் பைசன். இதில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார். அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.
இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. இப்படம் அருமையான வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இதுவரை ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜ் பைசன் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram