சினிமா செய்திகள்

விஜயகாந்த் மறைவுக்கு இயக்குநர் மிஷ்கின் இரங்கல்

இந்த தமிழ் பூமி தவம் என உங்களைச் சுமக்கும் என்று இயக்குநர் மிஷ்கின் கூறியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை, 

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.

விஜயகாந்த் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், விஜயகாந்த் மறைவுக்கு திரைப்பட இயக்குநர் மிஸ்கின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதில், ஒரு அரை நூற்றாண்டு காலம் தமிழ் சினிமாவில், தமிழர்களின் மனதில் ஒரு பெரும் ஆலமரமாக ஓங்கி வளர்ந்து நிழற் கொடுத்து, கனி கொடுத்து, அருள் கொடுத்து, அன்பு கொடுத்து, இன்று இந்த மண்ணிலே சாய்ந்து விட்டீர்களே ஐயா.

நீங்கள் சாய்ந்தாலும் இந்த தமிழ் பூமி தவம் என உங்களைச் சுமக்கும். உங்கள் வேர்கள் எங்கள் இதயங்களில் பயணிக்கும், நீங்கள் விட்டுச் சென்ற விழுதுகள் இந்த பூமியில் மரங்களாய் வளரும். சொர்க்கம் என்று ஒன்று இருந்தால் அங்கே உங்களுக்காக ஒரு மாளிகை திறந்திருக்கும், ஓய்வெடுங்கள் ஐயா. என்றும் சிரித்த உங்கள் கன்னங்களில் நான் முத்தமிடுகிறேன், என்று தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.  

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்