சென்னை,
தமிழகத்தில் சாதியின் பெயர் கொண்ட பாடல்களை பொது இடங்களில் ஒலிபரப்ப தடை விதிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இயக்குநர் சீனு ராமசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது;-
"தமிழகத்தில் சாதியின் பெயர் கொண்ட பாடல்கள் சினிமா, தனி இசை பாடல்கள் எதுவாயினும் அவற்றை பொது ஒலிப்பெருக்கிகளில் பொதுவிடத்தில் ஒலிபரப்பத் தடைவிதிக்க வேண்டும் என பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். எவர் பாடல்களிலும் உசுப்பேற்றும் சாதிய துவேஷம் மறைமுகமாக இருந்தாலும் கூட தணிக்கை தடை விதித்தல் செய்திட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வேண்டுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
Seenu Ramasamy (@seenuramasamy) June 23, 2023 ">Also Read: