சினிமா செய்திகள்

மாவீரன் படக்குழுவினரை பாராட்டி இயக்குநர் ஷங்கர் டுவீட்

மாவீரன் படக்குழுவினரை இயக்குநர் ஷங்கர் வெகுவாக பாராட்டியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படம் நேற்றுமுன் தினம் திரையரங்குகளில் வெளியானது. தற்போது இந்த திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், மாவீரன் படக்குழுவினர் இயக்குநர் ஷங்கர் வெகுவாக பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவீட்டரில் கூறி இருப்பதாவது;

'மாவீரன் அற்புதமாக எழுதப்பட்ட மடோன் அஸ்வினின் புத்திசாலித்தனம். கிளாஸ் மாஸ் என்டர்டெய்னர். திரைக்கதைக்குள் உள்ள அற்புதமான நகைச்சுவை உணர்வு ரசிக்கும்படி உள்ளது. சிவகார்த்திகேயன் பாராட்டுக்குரிய நடிப்பினை வழங்கியுள்ளார்.

அதிதி கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார். சரிதா, யோகிபாபு மற்றும் மிஷ்கின் சிறப்பாக நடித்துள்ளனர். ஆக்சன் காட்சிகள் மற்றும் நடனம் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. இந்த படத்திற்காக உழைத்த அனைவருக்கும் பாராட்டுக்கள்! நிச்சயமாக குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு மகிழ்ச்சியான புதிய அனுபவம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்