சினிமா செய்திகள்

மறைந்த பாடகி பவதாரிணியுடன் எடுத்த கடைசி புகைப்படத்தை பகிர்ந்த இயக்குநர் வெங்கட் பிரபு

பவதாரிணியின் மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தினத்தந்தி

சென்னை, 

இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி(47) புற்றுநோய் காரணமாக இலங்கையில் உள்ள ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் கடந்த 5 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 25-ம் தேதி உயிரிழந்தார். பவதாரிணியின் மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

பவதாரிணியின் உடல் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு தி.நகரில் உள்ள இளையராஜா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து இவரின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரத்துக்கு இவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது. பண்ணைப்புரம், லோயர்கேம்ப் அருகே உள்ள இளையராஜாவின் குருகிருபா வேத பாடசாலை ஆசிரமத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பவதாரிணி உடல் அவரது தாயார் ஜீவா மற்றும் பாட்டியின் நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதளத்தில் மறைந்த பாடகி பவதாரிணியுடன் எடுத்த கடைசி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும், 'பவதாரிணியுடன் இருந்த கடைசி புகைப்படம்' என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை