சினிமா செய்திகள்

மோகன்லாலின் சரித்திர படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்

மரைக்காயர் அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தை தியேட்டருக்கு பதிலாக ஓ.டி.டி. தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாக படக்குழுவினர் தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் ரூ.100 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் உருவாகி உள்ள சரித்திர படம் மரைக்காயர் அரபிக்கடலின்டே சிம்ஹம். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிட உள்ளனர்.

இதில் அர்ஜுன், பிரபு, சுனில் ஷெட்டி, மஞ்சுவாரியர், கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரியதர்ஷன் இயக்கி உள்ளார். படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து கொரோனா உள்ளிட்ட சில பிரச்சினைகளால் 2 வருடங்களாக திரைக்கு வராமல் முடங்கி உள்ளது.

படம் கடந்த மார்ச் மாதம் ரிலீசாகும் என்று அறிவித்து வெளியாகவில்லை. பின்னர் ஓணம் பண்டிகையையொட்டி ஆகஸ்டு மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்தனர். அப்போதும் படம் வரவில்லை. இது மோகன்லால் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மரைக்காயர் அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தை தியேட்டருக்கு பதிலாக ஓ.டி.டி. தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாக படக்குழுவினர் தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. பேச்சுவார்த்தை இறுதியானவுடன் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்