சினிமா செய்திகள்

'கங்குவா' ஹீரோயின் முகத்தை தனது கையில் டாட்டூவாக்கிய காதலன்

'கங்குவா' ஹீரோயின் திஷா பதானியின் முகத்தை அவரது காதலன் தனது கையில் பெரிதாக டாட்டூவாக வரைந்துள்ளார். இந்தப் புகைப்படம் இப்போது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தினத்தந்தி

'சிறுத்தை' சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'கங்குவா' படம் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார் பாலிவுட் நாயகி திஷா பதானி. இவர் நடிகர் ஜாக்கி ஷெராபின் மகன் டைகர் ஷெராபை காதலித்து வந்தார். ஆனால், இப்போது இருவரும் பிரேக்கப் செய்த நிலையில் வெளிநாட்டு மாடலான அலெக்ஸாண்டர் என்பவரை டேட் செய்து வருகிறார் திஷா.

தனது தோழி மற்றும் அலெக்ஸாண்டருடன் சமீபத்தில் வெளியே சென்றிருக்கிறார் திஷா. அது தொடர்பான வீடியோ வெளியான போது அலெக்ஸ் கையில் இருந்த டாட்டூ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் இது 'திஷாவின் டாட்டூவா?' எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

View this post on Instagram

மேலும், இருவரும் காதலித்து வருகின்றனர் என்றும் நெட்டிசன்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் 'கல்கி 2898 ஏடி' படத்திலும் நடித்துள்ளார் திஷா.

பாலிவுட் மட்டுமல்லாது தென்னிந்திய படங்களிலும் நடிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார் திஷா.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?