சினிமா செய்திகள்

விவாகரத்து வதந்தி... தீபிகா படுகோனே பதிலடி

தினத்தந்தி

இந்தியில் முன்னணி கதாநாயகியாக கொடிகட்டி பறக்கும் தீபிகா படுகோனே தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்து இருந்தார். இவரும், பிரபல இந்தி நடிகர் ரன்வீர்சிங்கும் காதலித்து 2018-ல் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்துக்கு பிறகும் தீபிகா படுகோனே படுக்கை அறை காட்சிகளில் நெருக்கமாக நடிப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. கவர்ச்சியாக நடிப்பது கணவர் ரன்வீர் சிங்குக்கு பிடிக்கவில்லை என்றும், இதனால் இருவரும் விவாகரத்து செய்யும் முடிவில் இருக்கிறார்கள் என்றும் இந்தி பட உலகிலும், இணைய தளங்களிலும் தகவல் பரவியது. இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் பேசினர். ஒரு நிகழ்ச்சியில் ரன்வீர்சிங் கையை பிடிக்காமல் தீபிகா படுகோனே உதறிவிட்டு சென்ற காட்சிகளும் வைரலானது. இந்த நிலையில் விவாகரத்து வதந்திக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தீபிகா படுகோனே வலைதளத்தில் பதிவு வெளியிட்டு உள்ளார்.

அதில், "உங்களை எல்லா விதத்திலும் சிரிக்க வைக்கக்கூடிய வாழ்க்கையை அழகாக்கக்கூடிய உங்கள் நண்பரையே காதலித்து திருமணம் செய்து கொள்ளுங்கள். அப்போதுதான் உங்கள் வாழ்க்கை நானும், ரன்வீர் சிங்கும் இருப்பதுபோல் மகிழ்ச்சியாக இருக்கும்'' என்று குறிப்பிட்டு உள்ளார். இதன் மூலம் விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்