சினிமா செய்திகள்

நலிந்த தயாரிப்பாளர்களுக்கு ரூ.65 லட்சம் தீபாவளி பரிசு

நடிகர் சங்கம் சார்பில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசாக வேட்டி, சேலைகள் சமீபத்தில் வழங்கப்பட்டன.

தினத்தந்தி

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கும் இவை அனுப்பி வைக்கப்பட்டது. இதுபோல் முன்னணி நடிகைகள் துணை நடிகர்நடிகைகளுக்கும் வழங்கப்பட்டன.

வெளியூர்களில் உள்ள நாடக நடிகர், நடிகைகளுக்கும் அங்குள்ள நடிகர் சங்க பிரதிநிதிகள் மூலம் விநியோகிக்கப்பட்டது. இப்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பிலும் தீபாவளி பரிசுகள் வழங்கப்பட்டு உள்ளன. சங்கத்தில் உள்ள நலிந்த தயாரிப்பாளர்களை கணக்கெடுத்தனர்.

650 தயாரிப்பாளர்கள் அந்த பட்டியலில் இருந்தார்கள். 650 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டன. மொத்தம் ரூ.65 லட்சம் தீபாவளி பரிசாக வழங்கி உள்ளனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை