சினிமா செய்திகள்

"காந்தாரா சாப்டர் 1" படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள காந்தாரா சாப்டர் 1 படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

கன்னட திரைப்படமான 'காந்தாரா' கர்நாடகாவில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. காந்தாராவின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, ரிஷப் ஷெட்டி 'காந்தாரா சாப்டர் 1' படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இந்த படத்தில் ருக்மணி வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இந்த படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்துள்ளது. பழங்குடிகள் - மன்னர் வாரிசுகளுக்கு இடையேயான கதையில் கடவுள், தொன்மம் உள்ளிட்ட விஷயங்களைப் பதிவு செய்துள்ளார் ரிஷப் ஷெட்டி. பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாளில் இந்திய அளவில் ரூ.65 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை தினம் என்பதால் இதன் வசூல் மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்