சினிமா செய்திகள்

'தக் லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்' ஜூன் 5-ந் தேதி வெளியாக உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் வருகிற ஜூன் 5-ந் தேதி திரைக்கு வருகிறது.

பிரம்மாண்ட பெருட்செலவில் உருவாகியிருக்கும் இப்படத்தை திரையில் காண சினிமா ரசிகர்கள் ஆவலேடு காத்திருக்கின்றனர். இந்தநிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட் வெளியாகியிருக்கிறது. அதாவது, வருகிற மே 16-ந் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் தக் லைப் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாf நடைபெற உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு