சினிமா செய்திகள்

இந்த படம் பிடிக்கவில்லை என்றால் எனது அடுத்த படத்தைப் பார்க்காதீர்கள் - பிரபல நடிகர்

இப்படத்தில் பெருசு பட நடிகை நிஹாரிகா என்.எம் கதாநாயகியாக நடித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

பிரபல தெலுங்கு நடிகர் பிரியதர்ஷி. இவர் தற்போது மித்ர மண்டலி என்றகு நகைச்சுவை படத்தில் நடித்துள்ளார்.மேலும் இப்படத்தில் பெருசு பட நடிகை நிஹாரிகா என்.எம் கதாநாயகியாக நடித்துள்ளார். விஜயேந்தர் எஸ் இயக்கியுள்ள இந்தப் படம் வருகிற 16-ம் தேதி வெளியாக உள்ளது.

இதற்கிடையில், ரிலீசுக்கு முந்தைய நிகழ்வின்போது பிரியதர்ஷி ஒரு சுவாரஸ்யமான கருத்தை வெளியிட்டார், அது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அவர் கூறுகையில், "படம் மிகவும் நன்றாக வந்துள்ளது. மித்ர மண்டலி பிடிக்கவில்லை என்றால் எனது அடுத்த படத்தைப் பார்க்க வேண்டாம் என்றார்.

சப்தா அஸ்வா மீடியா ஒர்க்ஸ் மற்றும் வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்து, பிவி ஒர்க்ஸ் கீழ் பன்னி வாஸ் வழங்கிய இந்தப் படத்திற்கு ஆர்ஆர் துருவன் இசையமைத்துள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு