சினிமா செய்திகள்

“ஆர்யன்” படம் பார்க்கும் முன் “ராட்சசன்” படத்தை பார்க்காதீர்கள் - விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷாலின் ‘ஆர்யன்’ படம் இன்று 800 திரைகளில் வெளியானது.

தினத்தந்தி

சென்னை,

விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ஆர்யன். இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கியுள்ளார். இதில் மானசா சவுத்ரி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் இன்று வெளியானது. ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நடிகர் விஷ்ணு விஷால், ராட்சசன் படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் போலீஸ் கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்திரி முக்கிய பாத்திரத்தில் நடிக்க, உடன் சாய் ரோனக், தாரக் பொன்னப்பா, மாலா பார்வதி, அவினாஷ், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

இன்று வெளியாகியுள்ள ஆர்யன் படத்துக்காக நெகிழ்ச்சியுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் விஷ்ணு விஷால். அதில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு தனி நாயகனாக நடித்து ஆர்யன் படம் வெளியாகியுள்ளதை நினைவுக் கூர்ந்துள்ளார். மேலும், படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அறிக்கையின் முடிவில், சில படங்கள் பார்க்கும்போது மூளையை வீட்டிலேயே விட்டுவிடுங்கள் என்று மக்கள் அடிக்கடி சொல்வார்கள். ஆர்யன் படத்தைப் பொறுத்தவரை உங்கள் சிந்தனையை விட்டுவிட்டு படத்தை அனுபவியுங்கள். ஆம், ஒரு சிறிய வேண்டுகோள் ஆர்யன் பார்க்கும் முன்பு ராட்சசன் படத்தைப் பார்க்காதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார் விஷ்ணு விஷால். இந்த அறிக்கையின் வார்த்தைகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து