சினிமா செய்திகள்

துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

சூதாட்டம் தொடர்பான கதைக்களத்துடன் ‘ஐ அம் கேம்’ படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

தினத்தந்தி

சென்னை,

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவரது நடிப்பில் சமீபத்தில் காந்தா படம் வெளியானது. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து தற்போது, ஐ அம் கேம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை நஹாஸ் ஹிதாயத் இயக்குகிறார். சூதாட்டம் தொடர்பான கதைக்களத்துடன் இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இதில் தமிழ் திரைப்பட நடிகரும் இயக்குனருமான மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் சண்டை இயக்குனராக அன்பறிவு, மேலும் நடிகர்களான கதிர், ஆண்டனி வர்கீஸ் பிபி ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்த நிலையில், ஐ அம் கேம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த புதிய திரைப்படம் நடிகர் துல்கர் சல்மானின் 'வே பாரர்' நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து