சினிமா செய்திகள்

துல்கர் சல்மான் மற்றும் ராணா இணைந்து நடிக்கும் `காந்தா'

துல்கர் சல்மான் மற்றும் ராணா இணைந்து நடிக்கும் `காந்தா' படத்தின் பூஜை இன்று ஐதராபாத்தில் நடைப்பெற்றது

தினத்தந்தி

ஐதராபாத்,

மலையாள சினிமா முன்னணி நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். அவர் தற்பொழுது லக்கி பாஸ்கர் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் அக்டோபர் 31ம் தேதி வெளியாகவுள்ளது.

அடுத்ததாக துல்கர் சல்மான் மற்றும் ராணா தகுபதி இருவரும் இணைந்து காந்தா என்ற படத்தில் நடிக்கவுள்ளனர். இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கவுள்ளார். படத்தின் பூஜை இன்று ஐதராபாத்தில் நடைப்பெற்றது. படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் மற்றும் படக்குழு கலந்துக் கொண்டனர்.

இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ , சுல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தை வேபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் இயக்குனர் 'தி ஹண்ட் பார் வீரப்பன்' மற்றும் நிலா திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்