image courtecy:instagram@dushara_vijayan 
சினிமா செய்திகள்

திரையுலகில் இருந்து விலகும் துஷாரா விஜயன் - ஏன் தெரியுமா?

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ராயன்' படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 6-ம் தேதி நடைபெற்றது.

தினத்தந்தி

சென்னை,

ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் துஷாரா விஜயன். மேலும் , இவர் கழுவேத்தி மூர்க்கன், அநீதி, வேட்டையன், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ராயன் படத்திலும் நடித்துள்ளார். ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 6-ம் தேதி நடைபெற்றது.

இந்த விழாவில் தனுஷ், துஷாரா விஜயன் உள்ளிட பலர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பல விஷயங்களை  துஷாரா விஜயன் பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் கூறுகையில்,

'என்னுடைய 35 வது வயதில் நான் திரையுலகில் இருந்து வெளியேறி விடுவேன், அதன் பிறகு நடிக்க மாட்டேன். 35 வயதுக்கு பிறகு சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்', என்றார்.

தற்போது இவருக்கு 26 வயது நடைபெற்று வரும் நிலையில் இன்னும் 9 ஆண்டுகள்தான் அவர் நடிப்பார் என்பது அவரது இந்த பேச்சில் இருந்து தெரியவந்துள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு