சினிமா செய்திகள்

“எகோ” படத்தின் இயக்குநரை பாராட்டிய தனுஷ்

தின்ஜித் அய்யாதன் இயக்கத்தில் சந்தீப் பிரதீப் நடித்துள்ள ‘எகோ’ படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது.

கிஷ்கிந்தா காண்டம் பட இயக்குனர் தின்ஜித் அய்யாதன் இயக்கிய படம் ‘எகோ’ . இதில், படக்கலம் படத்தில் கவனம் ஈர்த்த நடிகர் சந்தீப் பிரதீப் நடித்துள்ளார். மேலும், இந்தப் படத்தில் அசோகன், பியானா மோமின், என்.ஜி. ஹங் ஷென், சிம் ஸி பீ, சாஹிர் முகமது மற்றும் ரஞ்சித் சேகர் ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.

இப்படம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது. இப்படம் ரூ. 55 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

மலைத்தொடர்களால் சூழப்பட்ட ஒரு பகுதியில் காவல்துறையிடமிருந்து தப்பித்த குரியாச்சன் என்பவரைக் கண்டுபிடிக்கும் கதையில் சில சுவாரஸ்யமான திருப்பங்களும், திரில்லர் அம்சங்களும் இப்படத்தில் இடம்பெற்றிருந்தன. திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.

மலையாள திரைப்படமான ‘எகோ’ ஒரு தலைசிறந்த படைப்பு என்று தனுஷ் அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், ‘எகோ’ பட இயக்குநர் தின்ஜித் அய்யதனை நடிகர் தனுஷ் நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.