சினிமா செய்திகள்

2 வயதில் தொடங்கிய பயணம்…இன்று ஆஸ்கர் மேடையில் எல் பேனிங்

பிரபல ஹாலிவுட் நடிகை எல் பேனிங்.

வாஷிங்டன்,

‘செண்டிமென்டல் வேல்யூ’ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதுக்கு ஹாலிவுட் நடிகை எல் பேனிங் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு தன்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

27 வயதான எல் பேனிங், அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆஸ்கர் விழாவில் சிறந்த துணை நடிகை பிரிவில் போட்டியிடுகிறார். இது எல் பேனிங்கின் முதல் ஆஸ்கர் பரிந்துரை என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு வயதிலிருந்தே நடித்து வரும் அவர், “என் வாழ்க்கையில் இதுபோன்ற அனுபவம் இதுவே முதல் முறை. இது எனக்கு மிகவும் சிறப்பான தருணம்,” என்று உணர்ச்சிபூர்வமாக கூறியுள்ளார். ‘செண்டிமென்டல் வேல்யூ’ திரைப்படம் மொத்தம் 9 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.