சினிமா செய்திகள்

அனைவரும் முகக்கவசம் அணியுங்கள்: அபிஷேக் பச்சன் டுவிட்

அனைவரும் முகக்கவசம், சமூக இடைவெளி ஆகிய கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்கும்படி நடிகர் அபிஷேக் பச்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் குடும்பத்தினருக்கு அண்மையில் கொரோனா தொற்று ஏற்பட்டது. அபிஷேக் பச்சனின் தந்தையும் பாலிவுட் உச்ச நட்சத்திரமுமான அமிதாப் பச்சன், மனைவி ஐஸ்வர்யா ராய், மகள், ஆராத்யா ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

அவாகள் அனைவருமே மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா. ஐஸ்வாயா ராய் மற்றும் ஆராத்யா ஆகியோ கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பிய நிலையில், கடந்த மாதத் தொடக்கத்தில் அமிதாப் பச்சனும் அபிஷேக் பச்சனும் குணமடைந்து வீடு திரும்பினார்கள்.

கொரோனாவில் இருந்து மீண்டுள்ள அபிஷேக் பச்சன் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் டுவிட்டரில் அபிஷேக் பச்சனின் கூறியிருப்பதாவது: அனைவரும் முகக்கவசம் அணியுங்கள். பாதுகாப்பாக இருங்கள். சமூக இடைவெளியைக் கடைபிடியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்