சினிமா செய்திகள்

உதயநிதி படத்தில் நடிக்கிறார் பகத் பாசில்..!

உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருக்கும் திரைப்படத்தில் பகத் பாசில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சென்னை,

உதயநிதி ஸ்டாலின் தற்போது 'ஆர்டிகிள் 15' இந்தி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான 'நெஞ்சுக்கு நீதி' படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து அவர் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் முதல் கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. இந்த திரைப்படத்தை 'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க இருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான 'புஷ்பா' திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் பகத் பாசில் உதயநிதியின் படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உதயநிதியின் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படத்தின் பணிகள் முடிந்ததும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் பிற நடிகர்கள் மற்றும் குழு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்

இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது துருவ் விக்ரம் நடிப்பில் கபாடியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்