சினிமா செய்திகள்

சிம்புவுக்கு வில்லனாக நடிக்கிறார் பகத் பாசில்..?

'கொரோனா குமார்' திரைப்படத்தில் சிம்புவுக்கு வில்லனாக பகத் பாசில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழ் சினிமாவில் 'வேலைக்காரன்' திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பகத் பாசில். தொடர்ந்து தற்போது கமல்ஹாசனுக்கு வில்லனாக 'விக்ரம்' திரைப்படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதிஸ்டாலின் நடிக்கும் படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில் இயக்குனர் கோகுல் இயக்கும் 'கொரோனா குமார்' திரைப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு வில்லனாக நடிக்க பகத் பாசிலிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தின் தொடர்ச்சியாக கொரோனா குமார் திரைப்படம் உருவாகிறது. இந்த திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்கிறார். இந்த திரைப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்கிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்