சினிமா செய்திகள்

"நடிகைகளின் போலி ஆபாச படங்கள்.."- அபர்ணா தாஸ் கண்டனம்

நடிகைகளின் போலி ஆபாச படங்கள் இணையத்தில் வெளியிடப்படுவதை அபர்ணா தாஸ் கண்டித்து உள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

பீஸ்ட்', டாடா' படங்களில் நடித்து பேசப்பட்ட அபர்ணா தாஸ், திருமணத்துக்கு பிறகும் படங்கள் நடித்து வருகிறார். தற்போது தமிழ், மலையாளத்தில் ஓய்வின்றி நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் நடிகைகளின் போலி ஆபாச படங்கள் இணையத்தில் வெளியிடப்படுவதை அவர் கண்டித்து உள்ளார். அவர் கூறும்போது, சமூக வலைத்தளங்களில் நடிகைகளின் போலி ஆபாச படங்கள் பரவி கிடக்கின்றன. இதை எப்படி தடுப்பது? என்றே புரியவில்லை. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் எதிர்காலத்தில் இந்த பிரச்சினை இன்னும் அதிகமாகும் என்பது மட்டும் புரிகிறது.

எனவே இது என் புகைப்படம் தான், இது என் புகைப்படம் கிடையாது என்று ஒவ்வொருவரிடமும் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. மக்கள் தான் எது உண்மை, எது உண்மையில்லை? என்று ஆராய்ந்து பார்த்துக்கொள்ள வேண்டும். நாம் நம்மை சரியாக வைத்துக்கொண்டாலே போதும். மற்றபடி இங்கு எதையுமே மாற்ற முடியாது'', என்றார்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்